கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா Huawei  மொபைல் நிறுவனங்களை தடை செய்தது. இந்தியாவில் தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் 59 செயலிகளிநன் காரணம் தான் இதற்கும் சொல்லப்பட்டது.  Huawei நிறுவனம் சீனாவிற்கு அமெரிக்காவின் பயனாளர்களின் தரவுகளை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் Huawei நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Meng Wanzhou

முன்னாள் சீனாவின் ராணுவ அதிகாரியாக இருந்தவர். இதன் காரணமாக சந்தேகம் அதிகரித்து அவரை கைது செய்ய அமெரிக்கா வாரன்ட் பிறப்பித்தது அவர் கனடாவில் இருந்ததால் கனடா அரசாங்கம் அவரைக் கைது செய்தது.


 ராஜதந்திர நடவடிக்கை என்று சீனா ஒரு மோசமான வேலையை செய்தது. சீனாவில் இருந்த கனடாவின் மக்கள் Michael Kovri, Michael Spavor

 ஆகிய இருவரையும் கைது செய்தது. இருவரில் ஒருவர் பிசினஸ்மேன் ஒருவர் முன்னாள் அரசு அதிகாரி. அவர்களில் கனடா கைது செய்த Meng Wanzhou திருப்பிக் கொடுத்தால் இந்த இருவரையும் திருப்பிக் கொடுப்போம் என்று சீனா விடாப்பிடியாக அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. தற்போது இதற்கு ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு வழியை சீனா நாடுவது எங்களுக்கு பிடிக்கவில்லை. கண்டிப்பாக அதற்கெல்லாம் கைதிகளை தர முடியாது இது நீதிக்கு எதிரானது என்று பதிலடி கொடுத்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.


Post a Comment

புதியது பழையவை