இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு வருடத்திற்கு முன்னர் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். ரன் அவுட்டாகி உலக கோப்பையை கைவிட்டவர். அதன் பின்னர் ஆடுகளத்திற்கு திரும்பவேயில்லை. ஐபிஎல் தொடரில் விளையாடலாம் என்று பயிற்சிக்கு வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக கரோனா வைரஸ் தாக்கி அனைவரையும் வீட்டில் உட்கார வைத்துவிட்டது.
 ஐபிஎல் தொடரில் ஆடியிருப்பார் ஆனால் அதுவும் முடியவில்லை. தற்போது அவருக்கு 39 வயதாகிவிட்டது. எப்போது ஓய்வு பெறுவார் என்று ரசிகர்களும் மற்ற கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து அவருடைய மேனேஜர் திவாகர் கூறுகையில்…
 நானும் தோழியும் கிரிக்கெட் பற்றி பெரிதாக பேசி கொள்ள மாட்டோம். ஆனால், அவரது நடவடிக்கைகளை கவனிக்கும்போது ஒன்று மட்டும் எனக்கு தெளிவாக தெரிகிறது. அவர் நிச்சயம் தற்போது ஓய்வு பெற மாட்டார் ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு வருடங்களாவது விளையாடுவார். இதற்காக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இன்றுவரை கிரிக்கெட் மீது இளம் வீரர் போல் ஒரு மிகப்பெரிய ஈடுபாட்டுடன் இருக்கிறார் தோனி இவ்வாறு கூறியுள்ளார் அவரது மேனேஜர் திவாகர்.


Post a Comment

புதியது பழையவை