சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் நிறுவனம் தற்போது டிக் டாக்கிற்கு மாற்று செயலியை உருவாக்க துவங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் உண்மையில் பேஸ்புக்கின் ஒரு தயாரிப்பு ஆகும். இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீனாவில் தயாரிக்கப்படும் செயலிகள் தடைசெய்யப்பட்டது. 59 செயலிகளில் மக்களால் அதிகம் உபயோகிக்கப்படும் செயலியாக டிக் டாக் இருந்தது . இதன் காரணமாக இதற்கு மாற்று செயலாக சிங்காரி போன்ற பல செய்திகள் ஏற்கனவே இருந்தது.


 ஆனால் அவற்றால் டிக் டாக் வாசிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் டிக் டாக்கிற்கு பதிலாக ‘Reels’ என்ற ஒரு புதிய மாற்று செயலியை நேற்று இரவு 7.30  மணிக்கு இந்திய பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த செயலி தற்போது சோதனை ஓட்டத்தில் தான் உள்ளது. வெகு சீக்கிரத்தில் உண்மையான பதிப்பு வெளியிடப்படும்.Post a Comment

புதியது பழையவை