இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடக்குமா இல்லையா என்ற சந்தேகம் தற்போது வரை இருந்து கொண்டுதான் இருக்கிறது.


 மார்ச் 2ஆம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் கரோனா வைரசால் காலவரையறையின்றி தள்ளிப்போடப்பட்டது. தற்போது உலக கோப்பை டி20 தொடர் தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலத்தை பயன்படுத்தி ஐபிஎல் தொடரை நிறுத்தி விடலாம் என பிசிசிஐ தலைவர் கங்குலி காத்துக்கொண்டிருக்கிறார்.


 இந்நிலையில் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார். ஆனால் இது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டியது சவுரவ் கங்குலி இல்லை. ஆசிய கிரிக்கெட் வாரியம் இதனை அறிவிக்க வேண்டும்.


 பிசிசிஐ தலைவரான சௌரவ் கங்குலி அறிவித்துள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.


Post a Comment

புதியது பழையவை