அடுத்த ஆண்டு பெண்களுக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்கு ஆயத்தமாகும் விதமாக தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.


 இந்த தொடருக்கான பயிற்சி முகாம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அகடமியில் நாளை துவங்க இருப்பதாக இருந்தது. இதற்காக கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.


 அதில் இரண்டு வீராங்கனைகள் ஒரு ஊழியர் என மூன்று பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து முகாமிலிருந்து அந்த மூவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இரண்டு வீராங்கனைகள் பெயரை கிரிக்கெட் வாரியம் தற்போது வரை வெளியிடவில்லை.


 இதனையடுத்து பயிற்சி முகாம் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது. இந்த பயிற்சி முகாம் மீண்டும் ஆகஸ்ட் 16ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Post a Comment

புதியது பழையவை