ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் 42 வயதான மருத்துவ ஆலோசகர் தீபக் பலிவால். கடந்த 2010ம் ஆண்டு தன் குடும்பத்துடன் இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்ட இவர் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியின் சோதனைக்குத் தன் பெயரை கொடுத்து இந்த பரிசோதனையில் பங்குகொண்ட ஒரே ஒரு இந்தியர் என்ற பெயரை பெற்றுள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி பரிசோதனைக்குரிய மருந்தை பெற்ற ஒரே ஒரு இந்தியரான தீபக் பலிவால் 1000 தன்னார்வலர்கள் குழுவில் இணைந்து chAdOx1 என்ற கோவிட்19 தடுப்பூசியை பெற்று அதற்கடுத்து 2 மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டு சாதனை பெற்றுள்ளார்.இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த தீபக் பலிவால், என் குடும்பத்தார், நண்பர்கள் என யாரும் இந்த பரிசோதனைக்கு என்னை பங்கெடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. சோதனை விலங்காக நீங்கள் மாற வேண்டாம் என்று கூறினார்கள். நான் இந்த தொற்றுநோயை எதிர்த்து போராட உலகிற்கு நான் உதவ வேண்டும் என்றால் என் உயிரை பணயம் வைத்தாவது இதை செய்தே ஆக வேண்டும் என்று கூறி அவர்களை எதிர்த்தே இந்த சோதனைக்கு நான் கையொப்பம் செய்தேன். ஆனால் எனக்கும் ஆரம்பத்தில் இதன் பக்கவிளைவுகளை எண்ணி குழப்பமும் பயமும் அடைந்தேன். பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் தான் இந்த முடிவை எடுத்து பரிசோதனையையும் மேற்கொண்டேன். சோதனையின் முடிவும் சாதகமானதாகத் தான் வந்துள்ளது. இதை கேள்விப்பட்ட தன் மனைவி இந்த பரிசோதனையில் என் பங்களிப்பை பற்றி பெருமைப்படுவதாக கூறியிருக்கிறார் என பெருமிதம் கொள்கிறார் தீபக் பலிவால்.

Post a Comment

புதியது பழையவை