கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் கடந்த 143 வருடங்களாக நடைபெற்று வருகிறது. எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் கடைசியில் ஒரு தொடரில் நடக்கும் கிளப் போட்டியாக இருந்தாலும் கூட ஒரு 50 ரசிகர்கள் ஆவது அதனை அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள் .ஆனால் தற்போது கொரோநா வைரஸ் இந்த சூழ்நிலையில் அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது. இந்த வைரஸ் மற்றவர்களின் எச்சில் மூலம் பரவும் என்பதால் கூட்டமாக இருக்கும் இடங்களில் அதிகமாக பரவ வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து போன்ற போட்டிகள் இனி ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று ரோஸ் பவுல் மைதானத்தில் துவங்கியது. இதில் ஒரு ரசிகர் கூட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மைதானத்தில் இருக்கும் 22 வீரர்கள் 2 நடுவர்கள் வெளியிலிருக்கும் 8 வீரர்கள் அவ்வளவுதான் மற்றபடி யாருக்கும் அனுமதி இல்லை இந்த டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளும் இப்படித்தான் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Post a Comment

புதியது பழையவை