மத்திய அரசு அடுத்த அதிரடி! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு தடை! ஜூலை 15க்குள் நீக்க கெடு! இந்தியா-சீனா இடையே பெரும் போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க இந்திய அரசு சீனாவில் தயாரிக்கப்படும் 59 செயல்களை சமீபத்தில் தடை செய்தது. இந்த செயலிகள் மூலம் இந்திய மக்களின் விவரங்கள் திருட படுவதாக சந்தேகிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டது.


 இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஒரு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஷேர் சாட் என பல பிரபலமான செயலிகளை இந்திய ராணுவ வீரர்கள் தங்களது மொபைல் போனிலிருந்து நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதில் மொத்தம் 89 செயலிகள் அடங்கும் .தற்போது தடை செய்யப்பட்ட செயலிகளில் 14 செய்தி தளங்கள்  4 வீடியோ ஹோஸ்டிங் தளங்கள், 3 உள்ளடக்க பகிர்வு தளங்கள், பப்ஜி உள்ளிட்ட 5 கேமிங் செயலிகள் மற்றும் சுமார் 15 டேட்டிங் செயலிகள் இவை அனைத்தும் இருக்கின்றன.
 ஜூலை 15க்குள் இந்த செயல்கள் அனைத்தையும் வீரர்கள் நீக்க வேண்டும் இல்லை எனில் நடவடிக்கை எடுப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது


Post a Comment

புதியது பழையவை