சமீப நாட்களில் சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் கொரானா பற்றிய செய்திகளைவிட பெரிதும் பேசப்பட்டு வருவது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் பற்றி தான். 

இதில் பெரிதும் பங்கு கொள்வது சில YouTube சேனல்கள் தான். பல சர்ச்சைகளுக்கு பெயர்போன கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற நடிகைகளையும் பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் ஹெலனையும் தங்கள் Youtube சேனல்களில் liveவில் பேசவைத்து ஆதாயம் பெற்று வந்தனர்.

 
இதனை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல எண்ணிய ஒரு YouTube Channel வனிதாவையும் லட்சுமி ராமகிருஷ்ணனையும் நேரடியாக liveவில் பேச வைத்தால் views பிச்சுக்கும் என்று எண்ணி நேற்று முன்தினம் இரவில் live விடியோ காலில் இருவரையும் இணைத்தனர். ஏற்கெனவே லட்சுமி ராமகிருஷ்ணன் மேல் கோபத்தில் இருந்த வனிதா கிடைத்தது வாய்ப்பு என்று சக நடிகை என்றும் பாராமல் லட்சுமி ரமகிருஷ்ணனை கொச்சை வார்த்தைகளால் தாக்க பதிலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணனும் பேசிவிட்டு வீடியோ காலை துண்டித்துவிட்டார்.


இந்த பிரச்சினையில் முன்னமே எலிசபெத் ஹெலனிடம் live வீடியோ காலில் பேசியிருந்த கஸ்தூரி தன் டிவிட்டர் பக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை tag செய்து ஆறுதல் கூறியும் வனிதாவை tag செய்து அவர் செய்தது தவறு என்றும் அறிவுரை கூறியுள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த வனிதா தன் டிவிட்டர் பக்கத்தில் கஸ்தூரியை tag செய்து இனி தன் தனிப்பட்ட வாழ்வில் மூக்கை நுழைக்க வேண்டாம், மேலும் சமூகத்தில் நீ நல்லவள் போல வேடமிட்டு கொண்டிருக்கிறாய் ஆதாரத்துடன் உன் உண்மை முகத்தை வெளி உலகிற்கு காட்டிவிடுவேன் என்று வனிதா எச்சரித்துள்ளார். 

                  

இதனால் நடிகைகளுக்கு நடுவில் டிவிட்டர் வாக்குவாதம் டிவிட்டரடி சண்டையாக மாறி வருகிறது. நெட்டிசன்களும் இது தங்களுக்கு கிடைத்த பொழுதுபோக்கு என்று தம் தம் இஷ்டங்களுக்கு கலாய்த்து வருகின்றனர்.

                

Post a Comment

புதியது பழையவை