சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாட்களுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒரு கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேர் தங்களது உயிரை இழந்து விட்டனர்.


 தற்போது வரை இதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. இப்படியிருக்கையில் சீனாவின் மங்கோலிய மாகாணத்தை சேர்ந்த 27 வயது மற்றும் 17 வயதை சேர்ந்த சகோதரர்களுக்கு புதிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அவர்களுக்கு தற்போது மருத்துவ சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வருகிறது இந்த இருவரும் மர்மோத் என்ற எலி வகை மாமிசத்தை சாப்பிட்டதால் இந்த நோய் வந்து இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது இதன் காரணமாக சீனாவின் பிளேக் நோய் மற்றும் தடுப்பு கட்டுப்பாட்டு ஆணையம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் இந்த வகை மர்மோத் என்ற எலி வகை மாமிசத்தை சாப்பிட வேண்டாமென்று அறிவுறுத்தி உள்ளது.


 இந்த வகை பிளேக் நோய் வந்துவிட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் இல்லையென்றால் 24 மணி நேரத்தில் இந்த நோய் தாக்கிய மனிதர் இறந்துவிடக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக மக்கள் மீண்டும் பயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.Post a Comment

புதியது பழையவை