ஒன் ப்ளஸ் நிறுவனம் தனது மிட்ரேஞ்ச்  ஸ்மார்ட்போன் என ONEPLUS NORD என்ற ஒரு புதிய வகை மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே மிட்ரேஞ்ச் மொபைல் போன்களுக்கு பெயர் போனது. ஆனால்  ONEPLUS  7 மற்றும் ONEPLUS 8 ஆகிய மொபைல் போன்கள் மிட்ரேஞ்ச் எல்லையை தாண்டி விட்டது. கிட்டதட்ட துவக்க விலையே 40,000 என்று தற்போது வரை விற்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மிட்ரேஞ்ச் மொபைல் ONEPLUS NORD என்னும் பெயரில் நேற்று வெளியிட்டது.இந்த மொபைல் போன் இந்தியாவில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகும் தொடக்க விலையாக 24,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Blue Marble மற்றும் Gray Onyx என்ற இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
 8 ஜிபி + 128gp 27,999 ஆகவும்
6 +128 ஜிபி 24,999 எனவும் 

12 + 256 ஜிபி 29.999 எனவும் விற்கப்பட உள்ளது

 இந்த மொபைல் போனில் பின்னால் நான்கு கேமராக்களும் அதில் மூன்று சென்சார் மற்றும் 48 எம்பி கேமராவும் செல்பி கேமரா முன்னால் மூன்று கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. 

இது ஸ்னாப்ட்ராகன் 765G 5G சிப்பை கொண்டு இயங்கும் மேலும் 5ஜி மொபைல் போன் ஆகவும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

புதியது பழையவை