கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்து வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் பல தொழிலாளர்கள் அடையாளமின்றி செல்லும் வழியில் இறந்து விட்டனர்.

 

 நூற்றுக்கும் மேற்பட்ட இழப்பு ஏற்பட்டது இப்படியிருக்க ஒருபுறம் மத்திய அரசு அதற்கான சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்தில் கொண்டு சென்று விட்டது.

 

 ஆனால் இதற்கு அந்தந்த தொழிலாளர்களிடம் இருந்து பயணக் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடுமையான காலகட்டத்திலும் மோடி அரசு பயண கட்டணத்தை வசூலித்து கிட்டத்தட்ட 429 கோடி ரூபாய் வருவாய் சம்பாதித்துள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி காட்டமாகவே விமர்சித்துள்ளார்.


Post a Comment

புதியது பழையவை