தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது தனது 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.  அரசியல் பிரவேசம் செய்யவும் காத்துக்கொண்டிருக்கிறார்.


 தனது அரசியல் பிரவேசத்தின் முக்கிய வார்த்தையாக ‘’சிஸ்டம் சரியில்லை’’ என்பதை தனது ரசிகர்கள் மூலம் பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த சிஸ்டத்தை சற்று தவறாக பயன்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த் .அதாவது மெடிகல் எமர்ஜன்ஸி என்று இ-பாஸ் எடுத்து விட்டு தன்னுடைய பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த். சமீபத்தில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்து விட்டுத்தான் வெளியூர் சென்றாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது.


 அதற்கு அவர் தற்போது அவருடைய இ-பாஸ் விவரத்தை வெளியிட்டுள்ளார். இதில் மெடிகல் எமர்ஜன்ஸிக்காக மருத்துவமனைக்கு செல்வதாக பதிவு செய்திருக்கிறார். ஆனால் அவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று திரும்பினார். இந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானதை பார்த்து இருப்போம்.


 சிஸ்டம் சரியில்லை என்று கூறிவிட்டு அந்த சிஸ்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தனக்கு தேவையானவற்றை தெளிவாக செய்து கொள்கிறார் ரஜினிகாந்த்.


Post a Comment

புதியது பழையவை