மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவம்! விசாரணைக்கு அழைத்துச் சென்றார் விவசாயி உயிரிழப்பு! திடீரென நிவாரணம் அறிவித்த தமிழக அரசு!

 

கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி சாத்தான்குளம் மொபைல் கடை வியாபாரிகளான தந்தை-மகன் பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரை அழைத்து சென்ற போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு குறித்து தற்போது பல போலீசார் கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது . 

 

இந்த வருவதற்கு முன்னர் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து என்ற 65 வயது விவசாயியை வனத்துறையினர் கடந்த 22ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் விசாரணையின் பாதையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் .


 

வனத் துறை போலீசார் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக உடனடியாக வெகுண்டெழுந்த முத்துவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். தற்போது திடீரென அவரது குடும்பத்திற்கு அரசு 10 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலையை அறிவித்துள்ளது. தொடர்ந்து போலீசார் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே இருப்பதை இது காட்டுகிறது.

Post a Comment

புதியது பழையவை