கோயம்புத்தூரில் அடுத்தடுத்து 6 கோவில்களில் முன்னால் தீ வைத்துவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பியோடினார். இதனை அறிந்த பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரித்தனர் .


அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த மர்ம நபரை தேடி வந்தனர். காலையில் இந்த சம்பவம் நடந்தது அந்த மர்ம நபரை கண்டிப்பாக பிடித்தாக வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் .


இதனை அடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த தீ வைத்த குறிப்பிட்ட நபர் சேலத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சேலம் விரைந்த தனிப்படை போலீசார் அங்கிருந்த அந்த நபரை கைது செய்தனர் . சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி யைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் கஜேந்திரன் என்பவர்தான் இந்த சம்பவத்தை செய்தது தெரியவந்துள்ளது.


 இப்படி கோவில்களுக்கு தீ வைத்துவிட்டு ஏதாவது ஒரு பலியை வேறு யாராவது ஒருவர் மீது போட்டு விடலாம் என்பது போல் நடந்து கொண்டாரா இவர். என கேள்விகள் எழுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.


              

Post a Comment

புதியது பழையவை