கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடரை தற்போது ஒரு வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம். அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுவதாக இருந்தது 16 சர்வதேச அணிகள் அணிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தி ஒரு மிகப்பெரிய தொடரை ஏற்பாடு செய்வது மிக கடினம் என்று உணர்ந்து ஐசிசி தற்போது அதனை அடுத்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது .


மேலும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் ஒரு நாள் உலக கோப்பை தொடரையும் நவம்பரில் விளையாடப்படும் என்று தள்ளி வைத்திருக்கிறது ஐசிசி.


Post a Comment

புதியது பழையவை