ஒரு கட்டத்தில் அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என அடுத்தடுத்து தோல்வி படங்களாக கொடுத்து கொண்டிருந்தார் விஜய் .அப்போது துப்பாக்கி என்னும் படம் வந்து அவரது மார்க்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்று தூக்கி நிறுத்தியது.

 

 நண்பன், காவலன் என்ற சில படங்கள் ஓரளவுக்கு ஓடினாலும் முதன்முதலாக 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட திரைப்படம் துப்பாக்கி  தான்

 

 முதலில் துப்பாக்கி படத்தில் நடிக்க இருந்தது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தான். படத்தின் கதையை இயக்குனர் முருகதாஸ் அவரிடம் கூறியுள்ளார். அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் 

 

ஆனால் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது இதற்கிடையில்தான் விஜயிடம் இயக்குனர் முருகதாஸ் கதை சொல்லியுள்ளார் கதையை கேட்டவுடன் விஜய்க்கு பிடித்த விட்டது 

 

உடனடியாக ஓகே செய்து தமிழில் விஜய்யை வைத்து படத்தை எடுத்து மிக பெரும் ஹிட் கொடுத்துள்ளார் முருகதாஸ்.

 

Post a Comment

புதியது பழையவை