தமிழ் சினிமாவில் 90களில் பல நடிகைகள் கொடிகட்டிப் பறந்தனர் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டனர். இப்படித்தான் முந்தானை முடிச்சு என்ற படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த உண்ணி மேரியை அனைவருக்கும் தெரியும். 1983 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது இயக்குனர் பாக்யராஜ் எழுதி இந்த படத்தை இயக்கி தானே நடித்து இருந்தார். இந்த படம் அப்போது பெரிய ஹிட்டானது. இவருக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார்.இதே படத்தில் பாட்டு டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் கிராமத்தில் கிளாமராக நடித்து அசத்தியவர் உண்ணி மேரி. தற்போது இவருக்கு 56 வயதாகிறது. கேரளாவைச் சேர்ந்தவர். 1969 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.


 அதன்பின்னர் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார். 1982 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. இதன்காரணமாக பத்து வருடங்கள் கழித்து திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். தற்போது ஆளே மாறிவிட்ட இவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Post a Comment

புதியது பழையவை