நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூன்றாவது மகள் தான் வனிதா. இவர் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார்.


 சர்ச்சையாக பிரபலம் ஆனாலும் தற்போது வரை சர்ச்சைகுள்ளேயே இருந்து வருகிறார் வனிதா. சமீபத்தில் பீட்டர் பால் என்னும் சினிமா தொழில்நுட்ப கலைஞரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. இந்த திருமணம் குறித்து பல விமர்சனங்களும் பலவிதமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. மேலும், இதுபற்றி பேசிய பல சினிமாவை சார்ந்த பெண்களுக்கும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் இந்த மோதல் நேற்று லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் சேர்ந்து முற்றிவிட்டது. அவரை கண்டபடி பேசிய வனிதா சமூக வலைதளங்களில் நேற்று கஸ்தூரிக்கும் ஒரு பதிலடி கொடுத்திருந்தார் .இந்நிலையில் தன் குடும்ப வாழ்க்கையை பற்றி பலரும் மீடியாவில் பேசிக் கொண்டிருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார், இதன் காரணமாக ட்விட்டர் பக்கத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார், நேற்றிரவு வரை பலருக்கும் பதிலடி கொடுத்து வந்த வனிதா திடீரென ஒரு முடிவு எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தை டிஸ்ஏபில் செய்துவிட்டார்,Post a Comment

புதியது பழையவை