தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். தற்போது வரை 62 படங்களில் நடித்து முடித்துவிட்டார். கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டார். அவரது கடந்த படம் 300 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவரது மார்க்கெட் உயர்ந்து 80 கோடி ரூபாய் அளவிற்கு சென்றிருக்கிறது.


அவரது ஒரு படத்தின் சம்பளம் மட்டும் 80 கோடி ரூபாயாகும். இந்நிலையில் நேற்று இரவு திடீரென காவல்துறையின் கட்டுப்பாடு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இந்த மர்ம நபர் விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு உடனடியாக தொலைபேசியை வைத்துவிட்டார்.

இதன் காரணமாக உடனடியாக விஜய் என் வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு படு தீவிரமாக சோதனை நடத்தினர். ஆனால் சோதனையின் முடிவில் அங்கு எதுவும் இல்லை, இது வெறும் மர்ம தொலைபேசி அழைப்பு என்று போலீசார் கூறினர். இதனையடுத்து இந்த மர்ம தொலைபேசி அழைப்பு விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரித்த போது அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவரையும் அவரது குடும்பத்தினரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Post a Comment

புதியது பழையவை