உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாரபட்சமின்றி பாதுகாப்பில்லாமல் யார் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் தாக்கி வருகிறது. இங்கிலாந்தின் பிரதமர், பிரேசில் நாட்டின் பிரதமர், இத்தாலியின் மேயர் என பாதுகாப்பு இல்லாமல் சமூக இடைவெளி இல்லாமல் யார் யார் இருக்கிறார்களோ அனைவரையும் தாக்கி வருகிறது.


 தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை 2 லட்சத்து கடந்துவிட்டது. இதன் காரணமாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


 இந்நிலையில் நடிகர் விஷாலுக்கும் அவரது தந்தை ஜிகே ரெட்டிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. தற்போது தான் அவரை ஒரு வீடியோவை வெளியிட்டு தெரிவித்து உள்ளார் விஷால். 


கடந்த 20 நாட்களுக்கு முன்பே இந்த கொரோனா தொற்று எனக்கும் என் தந்தைக்கும் வந்துவிட்டது. தற்போது மருந்துகள் எடுத்து குணம் ஆகி விட்டதாகவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் விஷால் நரைத்த முடியுடன் மிகவும் எளிதாக இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நம்ம விஷாலா இது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Post a Comment

புதியது பழையவை